சிறுமியிடம் எல்லைமீறிய மாமா.. உடந்தையாக இருந்த அக்கா - போக்சோ சட்டத்தில் இருவரும் கைது

போக்சோ சட்டத்தில் கைதான தம்பதி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தம்பதி கைது.

  • Share this:
    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் உத்தரமேரூர் அருகில் கணவன் -மனைவி இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம்சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகன் பொன்னி தம்பதியினர். திருக்கழுக்குன்றம்  தாலுகாவைச் சேர்ந்த,  16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த தம்பதியினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பொன்னிக்கும் - மோகனுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பொன்னியின் சகோதரியான 16 வயது சிறுமி வாலாஜாபாத்தில் உள்ள டைலரிங் பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளார். இதன்காரணமாக சங்கராபுரத்தில் உள்ள தன் அக்கா பொன்னியின் வீட்டில் தங்கி பயிற்சி பள்ளிக்கு சென்றுவந்துள்ளார்.

    Also Read: நீட் தேர்வு எழுதி மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

    கடந்த ஜூன் மாதம் மனைவியின் தங்கை என்று கூட பாராமல் மோகன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கணவனை கண்டிக்க வேண்டிய பொன்னி இந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்ததுதான் வேதனையே. அக்கா கணவரின் தொல்லை அதிகரிக்கவே அங்கிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அக்கா வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி கண்ணீர்விட்டுள்ளார்.

    இதனையடுத்து சிறுமியின் தாய் உத்தரமேரூர் தாலுகா சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப்பெற்றுக்கொண்ட காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸாரின் விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மோகன் அதற்கு உடந்தையாக இருந்த பொன்னி இருவரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

     

    செய்தியாளர்: சந்திரசேகர் (காஞ்சிபுரம்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published: