குன்றத்தூர் அருகே எரிந்து செயல்படாத தனியார் கம்பெனியில் கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் - பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிட்கோல் ஏராளமான கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கு செயல்பட்டு வந்த கம்பெனி ஒன்று தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த கம்பெனி இதுவரை செயல்படாத நிலையில் காவலாளி மட்டும் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். இந்நிலையில் நேற்று அந்த நிறுவனத்தின் மேலாளர் அந்த கம்பெனியில் ஒரு பகுதியில் உள்ள பணியை செய்வதற்காக ஆட்களுடன் வந்தார்.
அப்போது அந்த நிறுவனத்தின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியது மேலும் அங்கு பார்த்த போது இரண்டு கழிவறையில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போரூர் உதவி கமிஷனர் பழனி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் சிதிலமடைந்து கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்து கிடந்தது 22 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என்பது தெரியவந்தது. ஆண் ஒரு கழிவறையிலும், பெண் மற்றொரு கழிவறையிலும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது உடல் முழுவதும் அழுகி இருப்பதால் இறந்து கிடந்தவர்கள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை மேலும் இறந்து போனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வட மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த கம்பெனியில் தீ விபத்தில் ஏற்பட்டதில் இருந்து இரவு நேரங்களில் சிலர் இந்த கம்பெனியில் உள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. மூடிக்கிடக்கும் கம்பெனிக்குள் இருவரும் உல்லாசமாக இருக்கும்போது கம்பிகளை திருட வந்தவர்கள் அந்த வாலிபரை கொலை செய்துவிட்டு பெண்ணை கற்பழித்து கொலை செய்தார்களாஅல்லது இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலை சேகரித்து அதில் யாராவது இறந்து போனவர்களில் உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் அங்கு பனிபுரியும் காவலாளி மற்றும் பக்கத்து கம்பெனிகளில் வேலை செய்பவர்களிடம் குன்றத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தீ விபத்தில் சிதலமடைந்த கம்பெனியில் இரண்டு கழிவறைகளில் ஆண், பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சோமசுந்தரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Dead body, Death, Police