காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன், இறைச்சி வாங்க வந்த அசைவப் பிரியர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு உத்தரவு இன்று வரை அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று அசைவப் பிரியர்கள் மீன், இறைச்சி, உள்ளிட்டவைகளை வாங்கி உண்டு மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் செயல்படும் மீன், இறைச்சி சந்தை விடுமுறை விடப்பட்ட நிலையிலும், மீன், இறைச்சி வியாபாரிகள் வீடுகளில் வைத்து விற்பனை செய்வதை அறிந்த ஏராளமான அசைவப் பிரியர்கள் மீன், இறைச்சி உள்ளிட்டவைகளை வாங்க அந்த பகுதிக்கு முழு ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளையும் மீறி வந்த வண்ணம் இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து தகவலறிந்த சிவகாஞ்சி போலீசார் மீன், இறைச்சி சந்தை பகுதிக்கு விரைந்து வந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன், இறைச்சி வாங்க வந்த அசைவப் பிரியர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
நாவின் ருசியை அடக்கமுடியாமல் மீன், இறைச்சி, வாங்க வந்த அசைவ பிரியர்களின் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் - சந்திரசேகர்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.