காஞ்சிபுரம் அடுத்துள்ள காரை பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் 40 வயதான அழகரசு. இவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியதோடு, சுற்றுவட்டார நிறுவனங்களில் இரும்புக் கழிவை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார் ஏப்ரல் 12ம் தேதி, மாலை, காரையில் உள்ள உறவினர் தோட்டத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு புகுந்த 4 பேர் கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர்.
படுகாயமடைந்த அழகரசு காஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்த வழக்கறிஞர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் என அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் சென்னையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை விரைந்த போலீசார், கொருக்குப்பேட்டையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த செட்டியார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், 23 வயதான ஸ்ரீதர், கோனேரிக்குப்பத்தைச் சேர்ந்த 33 வயதான வேலு மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்
அழகரசு வழக்கறிஞர் என்பதால் அந்த பந்தாவில், வெங்கடேசன் உள்ளிட்ட நபர்களை அடிக்கடி அழைத்து மிரட்டி வந்துள்ளார். தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அவர்களை அழைத்து அடிக்கவும் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரைக் கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
சேலம் : இறைச்சி கடைகளை உடனடியாக கடைகளை மூடச் சொன்னதால் அதிகாரிகள், வியபாரிகள் வாக்குவாதம்
அதேநேரம், அழகரசின் மனைவி அளித்த புகாரில், தொழில் போட்டி காரணமாக கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். கைதான 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.