வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தி முனையில் 44 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம் மைத்துனர் மகன் உட்பட 3 நபர்கள் கைது.
காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் பள்ளி அருகே மாருதி நகரில் ஆடிட்டர் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மேகநாதன் சகோதரிகள் கணவர் இருவரும் அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல அவர்கள் கடந்த 23ஆம் தேதி அன்று பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் 3 சகோதரர்களின் மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர்.
அப்பொழுது அன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென்று அந்த வீட்டில் முகமூடி அணிந்த 4 நபர்கள் கத்தியுடன் நுழைந்துள்ளனர். சற்றும் எதிர்பாராத பெண்கள் மூவரும் கூச்சலிட துவங்கியபோது கையிலிருந்த ஆயுதங்களை காட்டி மூன்று பேரையும் மிரட்டியுள்ளனர். சத்தம் போட்டால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டி இதையடுத்து அவர்களும் வேறு வழி இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
Also Read: “ஜல்லிக்கட்டு தான் வாழ்வின் ஒரே மகிழ்ச்சி” - தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்!
அவர்களது கை கால்களை கட்டிப்போட்டும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உட்பட வீட்டில் இருந்த சுமார் 44 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூபாய் 1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை முகமூடி அணிந்து வந்த நான்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து காஞ்சி தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு சந்தேகத்துக்கிடமான வகையில் இருவர் அந்த வீட்டின் அருகே நோட்டமிட்டது காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர் அந்த சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இருவரும் யார் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: இவங்க எல்லாமே என் மனைவிதான்.. சகலகலா கல்யாணராமன் சிக்கியது எப்படி?
இந்நிலையில் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தநிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணனின் தங்கை மகனான சந்தானகிருஷ்ணன் என்பவர் மது மற்றும் கோழி சண்டைக்கு பணம் செலவு செய்தல் போன்ற உல்லாச வாழ்க்கைக்கு பணம் தேவைப்படும் என்பதற்காக சொந்த தாய் மாமன் வீட்டில் நண்பர்கள் ஏவி திருட்டு சம்பவம் அரங்கேற்றி எதுவும் தெரியாதது போல் களமாட வீட்டில் நாடகமாடியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் சந்தானகிருஷ்ணன் பிடித்து விசாரணை செய்தபோது அவருடைய நண்பர் கௌதம் மற்றும் சிவகுமார் உடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். ஏழு வருடங்களாக சொந்தத் தாய் மாமனுடன் வீட்டில் தங்கி அனைவருடனும் நட்பாக பழகி உல்லாசமாக அனுபவிக்க பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read: புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 750 சவரன் நகை கொள்ளை..
இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 44 சவரன் நகை, 1,02,000 ரூபாய் ரொக்கம், 31 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: சந்திரசேகர் ( காஞ்சிபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gold Theft, Jewels, Money, Police arrested