தண்ணீரில் மிதக்கும் அதிசய கல்.. அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த தொழிலாளி

குள்த்தில் மிதந்த கல்

ராமேஸ்வரத்திலிருந்து புனித யாத்திரை சென்றவர்கள் யாராவது இங்கு கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் குளத்தில் போட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 • Share this:
  காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

  காஞ்சிபுரத்தை சேர்ந்த சுமைதுாக்கும் தொழிலாளர் செல்வராஜ். இவரது தங்கை மகன், கல் ஒன்றை ஆனியால் செதுக்கி கொண்டு இருந்தான். அவனிடம் என்ன செய்கிறாய் என கேட்டார். அப்போது அந்த சிறுவன் கோவில் குளத்தில், கல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அந்த கல்லில் சிவலிங்கம் செய்கிறேன் என  தெரிவித்தார்.பின் அந்த கல்லை அவரது வீட்டு தண்ணீர் தொட்டியில் போட்டப்போது அது மூழ்காமல் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள்  தண்ணீரில் மிதக்கும் கல்லை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

  ராமாயணத்தில் பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்தது என கேள்விப்பட்டுள்ளேன்.இந்த கல்லும் அதுபோன்ற அதிசய கல்லாக இருக்கும் என்பதால், காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தண்ணீரில் மிதக்கும் கல் குறித்து, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர் கூறியதாவது: இது பவளப்பாறை வகையை சார்ந்தது. இதன் எடை ஒன்றரை கிலோ இருக்கும். இவ்வகை பாறைகள் கடலில் மட்டுமே காணப்படும்.  மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது.  அரிதாக காணப்படும் இவ்வகை பவளப்பாறைகளை ராமேஸ்வரத்திலிருந்து புனித யாத்திரை சென்றவர்கள் யாராவது இங்கு கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் குளத்தில் போட்டு இருக்கலாம் என அவர் கூறினார்.

  செய்தியாளர்: சந்திரசேகர் ( காஞ்சிபுரம்)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: