Home /News /tamil-nadu /

Tamil Nadu Full Lockdown | மீன் வாங்க சமூக இடைவெளியை மறந்து குவிந்த மக்கள்

Tamil Nadu Full Lockdown | மீன் வாங்க சமூக இடைவெளியை மறந்து குவிந்த மக்கள்

மீன் மார்க்கெட்

மீன் மார்க்கெட்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க அதிகளவில்பொதுமக்கள் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரங்கு அமல்படுத்தப்படுகிறது.  காய்கறி, மளிகை பொருட்களை வாங்க பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இன்று இரவு 9 மணிவரை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் ஒருசில பகுதிகளில் காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை வாங்க சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் குவிந்து வருவதால் கொரோனா  தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ரயில் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று அதிகம் பேர் கூடினர். 14 நாட்களுக்கு கறிக்கடைகளுக்கு விடுமுறை என்பதால் அசைவப் பிரியர்கள் அதிகளவில் மீன் வாங்க குவிந்தனர்.

    மீன் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் காவல் துறையினர் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்திய போதும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மீன் வாங்குவதிலேயே ஆர்வமாக இருந்தனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 906 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 4,315 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், இதுவரை வைரஸ் தொற்று காரணமாக 612 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kancheepuram, Lockdown, Tamilnadu

    அடுத்த செய்தி