Home /News /tamil-nadu /

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்துவரும் பெண் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி!

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்துவரும் பெண் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி!

வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ள ஜெயப்பிரியா தற்போது ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். திருமணமாகி இருபது நாட்கள் ஆன நிலையில் தனியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 

    காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி படிக்கும் பொறியியல் பட்டதாரியான இளம் பெண் தனியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது.

    இறுதி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். காலை முதலே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வேட்பு மனு அளித்தனர்.

    அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காலூர் பகுதியில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 15வது வார்டுக்கான வேட்புமனுவை பட்டதாரி இளம்பெண் அ. ஜெயப்பிரியா(27)  தாக்கல் செய்தார். பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ள ஜெயப்பிரியா தற்போது ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க: சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி


    திருமணமாகி இருபது நாட்கள் ஆன நிலையில் தனியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த காலங்களில் காஞ்சிபுரம் மாவட்ட இளம் பெண்கள் பாசறை துணை செயலாளராக தான் பணிபுரிந்த வந்ததாகவும், தனது தந்தையும் அதிமுக நிர்வாகி என்று கூறும் ஜெயப்பிரியா, இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுவதாக தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kancheepuram, Local Body Election 2021

    அடுத்த செய்தி