கொரோனா காலத்தில் திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

கொரோனா காலத்தில் வறுமையால் வாடும் திருநங்கைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்துள்ளனர்.

 • Share this:
  காஞ்சிபுரம் மாவட்டம் நீலாங்கரையில் திருநங்கைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விஜய் ரசிகர்கள் நிவாரண பொருள்களை வழங்கினர்.

  கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு தொண்டு நிறுவனங்கள், குழுக்கள், அமைப்புகள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றன.

  Also Read: மம்தா பானர்ஜி - சோசலிசம் திருமணம் இன்று.. நெட்டிசன்களின் கவனம் பெற்ற கம்யூனிசவாதி இல்ல திருமணம்

  இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் கொரோனா காலத்தில் வறுமையால் வாடும் திருநங்கைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் சார்பாக கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 100 திருநங்கைகளுக்கும் மற்றும் 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசியும், காய்கறிகளையும் வழங்கியுள்ளனர். மொத்தமாக 150 பேருக்கு நீலாங்கரையில் வைத்து இந்த நலத்திட்ட உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்தனர். இதனைப்பெற்றுக்கொண்ட பொதுமக்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: