Home /News /tamil-nadu /

காஞ்சிப்புரம் அரசுப்பள்ளியில் பாடம் எடுத்த கலெக்டர் - வியந்துபோன கிராம மக்கள்

காஞ்சிப்புரம் அரசுப்பள்ளியில் பாடம் எடுத்த கலெக்டர் - வியந்துபோன கிராம மக்கள்

மாணவர்களுக்கு பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுக்கு பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் அருகே காலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

    காஞ்சிபுரம் அருகே உள்ள காலூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீரென அருகில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர்ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி வகுப்பறைகளில் நுழைந்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாணவ-மாணவிகளிடம் உரையாடினார்.

    இதைத்தொடர்ந்து 5-ம் வகுப்பு,6-ம் வகுப்பு,மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆசிரியையாக மாறி வகுப்பறை கரும்பலகையில் எழுதி இருந்த ஆங்கில இலக்கண பாடத்தை படிக்க வைத்து அதற்கான விளக்கத்தை மாணவ - மாணவிகளுக்குகூறி பாடம் நடத்தினார்.

    பின்னர் பள்ளி ஆசிரியர்- ஆசிரியைகளிடம் மாணவ மாணவிகளுக்கு முறையாக பாடம் நடத்த உத்தரவிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆசிரியையாக மாறி பாடம் நடத்தி அசத்திய மாவட்ட ஆட்சியரின் செயலை கிராம மக்களும், ஆசிரியர்களும் வியந்து, வெகுவாக பாராட்டினார்கள்.

    செய்தியாளர்: சந்திரசேகர் ( காஞ்சிபுரம்) 

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: English, Govt School, Kancheepuram, School students

    அடுத்த செய்தி