Home /News /tamil-nadu /

சினிமா பாணியில் திருட்டு.. ஆடிகாரை தூக்கிய கும்பல் - ஜிபிஎஸ் கருவி மூலம் போலீஸாரிடம் சிக்கிய பரிதாபம்

சினிமா பாணியில் திருட்டு.. ஆடிகாரை தூக்கிய கும்பல் - ஜிபிஎஸ் கருவி மூலம் போலீஸாரிடம் சிக்கிய பரிதாபம்

பறிமுதல் செய்யப்பட்ட கார்

பறிமுதல் செய்யப்பட்ட கார்

இந்த திருட்டு சம்பவத்தில் விஜய் சந்திரன் என்பவர் மூளையாக செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  ஏசி பழுதுபார்க்க சென்ற வீட்டில் இருந்த ஆடம்பரத்தை பார்த்த வாலிபர் சினிமா படத்தில் வருவது போன்று செயல்பட்டு விலை உயர்ந்த ஆடி காரை தன் நண்பர்களுடன் சேர்ந்து திருடி தப்பினர். காரில் இருந்த ஜிபிஆர்எஸ் கருவி மூலம் 13 நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்  நயப்பாக்கத்தில் வசித்து வருபவர் ரவி(வயது 49). கடந்த 20-ம் தேதி அதிகாலையில் வீட்டில் இருப்பவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்கள் வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.  வீட்டில் இருந்து 3 LED TV, 1 Laptop மற்றும் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஆடி காரையும் திருடி சென்றுள்ளனர்.

  Also Read: குளியல் வீடியோவை படம்பிடித்து, டார்ச்சர் செய்த கணவர்.. போலீஸில் சொல்லி கம்பி எண்ண விட்ட மனைவி

  காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த கார் மற்றும் டிவி, லேப்டாப் ஆகியவை தொலைந்து போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேற்படி வழக்கு சம்மந்தமாக மாவட்ட எஸ்பி  சுதாகர் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள்  அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுசம்பந்தமாக மேலும்  CCTV பதிவுகளை ஆய்வு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த  விஜய்சந்திரன்(24) ,பிரவின(24), லோகேஷ்(22), மற்றும் பிரகாஷ்(23) ஆகியோரை குற்றம் நடந்த 13 மணிநேரத்திற்குள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 90 லட்சம் மதிப்புள்ள களவுப்பொருட்கள் விலை உயர்ந்த ஆடி கார், டி.வி-3, லேப்டாப் மற்றும் கேமரா ஆகியவற்றை மீட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

  Also Read: கேரள இளம்பெண் மரணம்.. கணவர் கொன்றதாக குற்றஞ்சாட்டும் பெற்றோர்..வாட்ஸ் அப் சாட்டில் வெளியான அதிர்ச்சித் தகவல்

  இந்த திருட்டு சம்பவத்தில் விஜய் சந்திரன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. காவல்துறை விசாரணையில் விஜய் சந்திரன் கூறியதாவது, ஓரு சினிமா படத்தில் நடிகர்கள் காரை கடத்துவது போன்ற டெக்னிக்கை பார்த்து அதே போல் செய்யத் துணிந்தேன். நயபாக்கத்தில் அவ்வப்போது ஏசி ரிப்பேர் செய்வது போன்று ரவி அவர்களின் வீட்டில் நுழைந்து அவர்களின் வசதிகளையும் சுற்றுப்புறத்தையும்  நோட்டமிட்டேன். பின்னர் என்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு அவர் வீட்டில் இருந்த லேப்டாப், கேமரா, எல்ஈடி டிவி ஆடி கார் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினோம் . ஆடி காரில் ஜிபிஆர்எஸ் என்ற கருவி உள்ளதால் அதன்மூலம் எங்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விட்டதாக புலம்பியுள்ளார்.

  காஞ்சிபுரம் செய்தியாளர்: சந்திரசேகர்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Arrest, Audi, Crime | குற்றச் செய்திகள், Kancheepuram, Laptop, Police, Theft

  அடுத்த செய்தி