உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் விபத்து: 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்

கல்குவாரி - மாதிரிப்படம்

இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
    காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில், மலை சரிந்து விபத்துக்கு உள்ளானதில் 10 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் அடுத்துள்ள மருதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியில் மலை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் படிக்க... மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமைச்சர் காமராஜ்!

    அப்போது எதிர்பாராமல் பாறைகள் சரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்புடனும் சோசத்துடனும் காணப்படுகின்றது.
    Published by:Suresh V
    First published: