• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தங்கை கணவருடன் தவறான தொடர்பு.. வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்

தங்கை கணவருடன் தவறான தொடர்பு.. வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்

தற்கொலை செய்துக்கொண்ட பெண்

தற்கொலை செய்துக்கொண்ட பெண்

செண்பகவல்லி வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • Share this:
    காஞ்சிபுரம் அருகே தங்கை கணவருடன் கள்ளக்காதல், தற்கொலை செய்து கொண்ட பெண். தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ பதிவு செய்து தற்கொலை.

    காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் செண்பகவல்லி தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றபோது லாவண்யா இறந்துள்ளார்.கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் ஜோசப் செண்பகவல்லியின் வீட்டு மாடியில் தங்கியிருந்துள்ளார். அப்போது ஜோசப்பும் செண்பகவல்லிக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

    Also Read : குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை - கணவனை கைது செய்து விசாரிக்கும் போலீஸ்

    இந்த நிலையில் ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் செண்பகவல்லி க்கும் ஜோசப்புக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  பகல் 12 மணியளவில் செண்பகவல்லி அவருக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை மருத்துவமனை அனுப்பி வைத்து சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில் தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் தன்னை அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியதைத் தொடர்ந்து அவரது கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் சோமங்கலம் காவல்துறையினர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் , தற்கொலை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோசப்பை இன்று கைது செய்தனர்.

    பிறந்த குழந்தையை கை விட மனமில்லாமல் அதன் தந்தையுடன் தகாத நட்பு கொண்டு தற்போது தனது குடும்பத்தை தொலைத்த பெண்ணின் மரணம் கூடா நட்பு கேடாய் விளையும் என கூறும் பழமொழிக்கு உதரமாக அமைந்து விட்டது.

    செய்தியாளர்: சந்திரசேகர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: