காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..

தலைமைச் செயலாளர் சண்முகம்

காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஷ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக உள்ள பிரசாந்த் வடநேரே, பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக, நிதித்துறை இணைச் செயலாளராக உள்ள அரவிந்த் மாற்றப்பட்டுள்ளார்.

  மேலும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியராக பட்டு வளர்ப்புத் துறை இயக்குநர் ஸ்ரீவெங்கடப் பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் ஆட்சியராக பணியாற்றிவரும் ஆனந்த், வேளாண் துறை இணைச் செயலாளராக செயல்பட உள்ளார்.

  மேலும் படிக்க...தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து  கரூர் மாவட்ட ஆட்சியராக உள்ள அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், பட்டு வளர்ப்புத் துறை இயக்குநராக செயல்பட உள்ளார். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, கரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

  தர்மபுரி ஆட்சியராக தமிழ்நாடு ஊரக மாற்றுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: