• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்... 10 நாள் கழித்து மகனுடன் வந்து போலீஸில் சரண்

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்... 10 நாள் கழித்து மகனுடன் வந்து போலீஸில் சரண்

கொலை

கொலை

கடந்த ஒரு மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளக்காதல் சம்பவம் தொடர்பாக 10 கொலைகள் நடந்துள்ளன.

  • Share this:
    காஞ்சிபுரத்தில்  கள்ளக்காதலுக்காக கணவனை எரித்து கொலை செய்த மனைவி 10 நாட்களுக்கு பின்னர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியில் வசித்து வந்தவர்.  தங்கவேல்(44). இவருக்கு விமாலாராணி(37) என்ற மனைவியும் , ஹரிஷ்ராகவ்(14) என்ற மகன் உள்ளனர். இவர் ஓரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அவரது சகோதரர் சக்திவேல் தனது தம்பி தங்கவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது மனைவி விமலா ராணி மகன் ஆன்லைன் கிளாஸில் இருப்பதாக தெரிவித்து தொலைபேசியை துண்டித்துள்ளார்.  மீண்டும் கடந்த 1ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. பின்னர் 2ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் சக்திவேல் சந்தேகமடைந்தார்.

    இதனிடையே தங்கவேலின் தந்தை சோமமங்கலம் காவல் நிலையத்தில் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு  செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் படிக்க: தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை - இந்து மகா சபா தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி


    இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் சரண்டரானார். கடந்த 28ம்தேதி மதியம் தனக்கும் கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் அவரது கழுத்தில் அருவாமனையால் வெட்டியதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.

    பின்னர்,  இரவு 10 மணி வரை பிரேதத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் தனது கள்ளக்காதலனான சேலத்தை சேர்ந்த ராஜா என்பவரை வரவைத்து அருகில் உள்ள ஏரியில் பிரேதத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

    அதன்படி,  பிரேதத்தை கைப்பற்ற போலீசார் ஏரிக்கு சென்றபோது, பிரேதம்  அங்கில்லை என விமலா ராணி முன்னுக்கு  பின் முரணாக கூறியுள்ளார். அதன்பின் விமலாராணி அளித்த தகவலின் படி கடந்த 2ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அருகே பாதி எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டது தங்கவேலின் சடலம் என்பது தெரியவந்தது.

    மேலும் படிக்க: சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான முதலீட்டில் ரூ.100 கோடி மோசடி - 9 பேரை கைது செய்த சிபிஐ போலீஸார்


    இதையடுத்து,  மணிமங்கலம் காவல்துறையினர் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி விமலா ராணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கள்ளக்காதலன் ராஜாவை 3 தனிப்படை அமைத்து  காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளக்காதல் சம்பவம் தொடர்பாக 10 கொலைகள் நடந்திருப்பது குறிபிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: