காஞ்சிபுரத்தில் இரண்டாவது நாளாக நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடிரென கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவில் பலத்த இடியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிறைந்த மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உயரும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.இரவு நேரத்தில் பெய்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமாக குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.