• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு ரவுடி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்ட இளம்பெண்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு ரவுடி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்ட இளம்பெண்

Youtube Video

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக இளம்பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேல் மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குகன். மதுரமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானப்பிரியா; பட்டதாரிகளான இருவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்; இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.

    ஞானப்பிரியாவிற்கு வேறொரு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கவே அவர் கடந்த ஏப்ரல் 1ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், ஏப்ரல் 7ம் தேதி சென்னை பெரியார் திடலில் இருவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு அதைப் பதிவும் செய்தனர். அதேநேரம் தங்கள் மகளைக் காணவில்லை என ஞானப்பிரியா பெற்றோர், சுங்குவார் சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில், தங்களுக்கு பிரபல ரவுடி படப்பை குணா கொலை மிரட்டல் விடுப்பதாக இளம்பெண் ஞானப்பிரியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படியும் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞானப்பிரியா பெற்றோர் புகாரின் பேரில், போலீசார் தங்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதாக குகனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மேலூம் படிக்க... புதுச்சேரியில் இன்று (27-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

    பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, ஆள்மாறாட்டம், கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 3 வாரங்களுக்கு முன்பு படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில், தனது ஆதரவாளருக்கு நிலத்தை எழுதி வைக்கும்படி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார. ஐந்து நாட்களில் வெளியே வந்து தற்போது காதல் தம்பதிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

     

    இதுகுறித்து சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புகாரின் பேரில் இருகுடும்பங்களிடையே ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: