ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விடுதியில் இருந்து போக சொல்கிறார்கள்.. மீண்டும் வேலை கிடைக்குமான்னு தெரியாது? - கண்ணீர் வடிக்கும் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள்

விடுதியில் இருந்து போக சொல்கிறார்கள்.. மீண்டும் வேலை கிடைக்குமான்னு தெரியாது? - கண்ணீர் வடிக்கும் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

போராட்டத்தை காரணம் காட்டி, ஃபாக்ஸ்கான் மற்றும் விடுதி நிர்வாகத்தால் தாங்கள் பழிவாங்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஃபாக்ஸ்கான் நிறுனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, விடுதியில் இருந்து வெளியேற நிர்பந்திப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில், வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஜமின் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு, கடந்த புதன்கிழமை வழங்கிய உணவை அருந்திய 200-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

  இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பெண்கள் மாயமானதாக வதந்தி பரவியது. அதனால், சக பெண் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், கணேசன் ஆகியோர் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

  Also Read:  பாதுகாப்பானது தாயின் கருவறையும் கல்லறையும் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி தற்கொலை

   இதை தொடர்ந்து விடுதிகளுக்கு திரும்பிய பெண் ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதால் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நிர்பந்திப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். ஒரு வாரத்திற்கு விடுமுறை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, தங்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, விடுதியில் இருந்து வெளியேற்றுவதாக பெண்கள் கூறுகின்றனர். மேலும், தங்களை மீண்டும் வேலைக்கு அழைப்பார்களா எனத் தெரியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளனர்.

  இதனிடையே, பாக்ஸ்கான் ஆலை பெண் ஊழியர்களின் போரட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Foxconn, Protest, Tamil News, Women Employees