• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 1000 பேருடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல்... காஞ்சிபுரத்தில் கெத்து காட்டிய முன்னாள் ரவுடி

1000 பேருடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல்... காஞ்சிபுரத்தில் கெத்து காட்டிய முன்னாள் ரவுடி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பிரபல முன்னாள் ரவுடி ஒருவர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புடைசூழ வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
    ஜனநாயகத் திருவிழாவான சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மற்ற கட்சிகள் என பல தரப்பினரும் தங்கள் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான், ஸ்ரீபெரும்புதூரில், புதன்கிழமை அன்று வித்தியாசமான பரபரப்பான நிகழ்வு நடந்துள்ளது.

    சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் 43 வயதான வைரம் என்ற வைரமுத்து. முன்னாள் ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் ஆள்கடத்தல், அடிதடி என 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நிறுவனங்களில் இருந்து இரும்புக் கழிவுகளை ஒப்பந்த அடிப்படையில் அகற்றும் பணியை செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வைரம் தீர்மானித்துள்ளார். அதையடுத்து புதன்கிழமை அன்று, தனது ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றார்.

    அதிகளவிலான கூட்டத்தைப் பார்த்ததும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர், கூட்டத்தை ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வைரத்துடன் 10 பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர்.

    பின்னர் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் வைரத்துடன் 3 பேர் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு தேர்தல் அலுவலர் முத்து மாதவனிடம் வைரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வைரம் தனது ஆதரவாளர்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும் படிக்க... விஜய், சூர்யாவிடம் மன்னிப்பு... நடிகை மீரா மிதுன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

    திரைப்பட ஷூட்டிங் போல பெருங்கூட்டத்துடன் முன்னாள் ரவுடியான வைரம் பேரணியாக சென்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: