Home /News /tamil-nadu /

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்த போது மயங்கி விழுந்து அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம் அப்பாராவ் குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் சையத் சம்சுதீன் ( 57 ). இவர் காஞ்சிபுரம் காதிகிராப்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காதி கிராப்ட்  ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது அப்போது இந்த கூட்டத்தில் வருகின்ற புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனை தொடங்க வேண்டும் அதேபோல் விற்பனையை பெருக்குவதற்கு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    Also Read: மகளுக்காக நகை கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளுக்கு கொடுமை.. இளம்பெண் தற்கொலை வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

    ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று சையத் சம்சுதீன் மூச்சுவாங்க தொடங்கியுள்ளது.   அருகில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அவரை விசாரித்தனர்.  திடீரென்று அப்போது மயங்கி உள்ளார். இதனையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை வர வைத்தனர். ஆம்புலன்ஸ் வர சற்று தாமதமானது இந்நிலையில் வட்டாட்சியர் வாகனத்தில் அவரை கொண்டு செல்ல முயற்சித்தபோது 3 ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதிக்கு வந்து சேர்ந்தன.

    Also Read:  ஆதிபராசக்தியின் அவதாரம் என நான் கூறவில்லை, எனது ஆன்மீகத்தை உணர்ந்தவர்கள் கூறுகின்றனர் - அன்னபூரணி

    இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சில் அவருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அவருடைய உடல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் பலர் வேலையில் இருக்கும் பொழுது இவ்வாறு மன அழுத்தம் ஏற்பட்டு உருக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சந்திரசேகர் (காஞ்சிபுரம்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Death, District collectors, Kancheepuram, Police

    அடுத்த செய்தி