ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமாநில வாலிபர் செல்போன் சார்ஜர் ஒயரில் ஏற்பட்ட மின் கசிவால் எலெக்ட்ரிக் ஷாக் அடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜியாருள் மியா (20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள மேட்டு தெருவில் தன் சக நண்பர்களுடன் வசித்து வருகிறார். இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் நேற்று வேலை முடித்து தனது ரூமில் கைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு படுத்து உறங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்பொழுது சார்ஜர் ஒயரில் ஜியாருள் மியா கை பட்டதில் சார்ஜர் ஒயரில் ஏற்பட்ட மின் கசிவால் எலெக்ட்ரிக் ஷாக் அடித்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற ஒரகடம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Also read: என்னது Audi A6 சொகுசு கார் இல்லையா?.. கொதித்த நெட்டிசன்கள்!! கூகுளில் அதிகம் தேடப்படும் காரின் விலை..
மேலும் சார்ஜரில் ஏற்பட்ட மின் கசிவால் வடமாநில வாலிபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.