தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாச்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் 36து வார்டு காவலன் கேட் பகுதியை சேர்ந்த அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த விஷ்ணு காஞ்சி போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணைய விதிப்படி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் மரணமடைந்தால் அந்த குறிப்பிட்ட வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்படும்.
Must Read : பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு, உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி
அதன் அடிப்படையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 36-வது வார்டு தேர்தல் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.