சட்டமன்ற தேர்தலில் போட்டியிட் விரும்புவபவர்களுக்கான, விருப்பமனு படிவம் வழங்கலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், மேலாளர்கள் பத்மநாபன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
காலை 11.40 மணிக்கு இந்த பணிகள் தொடங்கின. வரவிருக்கும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள திமுகவினர் இன்று முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேராசிரியர் ஆய்வக நூலக கட்டிடத்தில் இன்று தொடங்கியது.
விருப்ப மனுக்களை பெறவும் பூர்த்தி செய்து அளிக்கவும், நாமக்கல் கோவை காஞ்சிபுரம் பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் வருகை தந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ஆம் தேதி வரை, விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது 25,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க... ‘அடிக்கல் நாட்டு நாயகன்’ : முதலமைச்சரை விமர்சித்த கனிமொழி
மகளிர் மற்றும் தனித்தொகுதியில் போட்டியிடுவோருக்கு 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்துள்ள தொகுதி, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் துரைமுருகன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.