Home /News /tamil-nadu /

தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்களின் நிலை என்ன? - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்களின் நிலை என்ன? - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

தனியார் தொழிற்சாலை விவகாரத்தில் வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்

    தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்ட விவகாரத்தில் விடுதி காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. சுமார் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கான விடுதியானது பூவிருந்தவல்லி பகுதியில் அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை விடுதியில் உணவு உண்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு விழுந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி சுகாதாரத்துறையினர் மற்றும் வெள்ளவேடு காவல்துறையினர் பெண் ஊழியர்களை மீட்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, நேமம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விடுதியில் தயாரிக்கப்பட்ட தரமற்ற உணவு இதற்கு காரணம் என அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

    Also Read: சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை 3 மணி நேரம் முடக்கிய பெண்கள்.. அதிகாலையில் பரபரப்பு

    இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தனியார் விடுதியிலேயே மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தார். பெண் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆறுதல் கூறினார். மறுநாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானோர் இரண்டு நாள்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் தரமான உணவுகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு திரும்பாத 8 பெண்களின் நிலை குறித்து ஆலை நிர்வாகத்திடம் கேட்டனர். இதற்கு நிர்வாகத்தினரிடம் இருந்து மலுப்பலான பதில் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், எட்டு நபர்கள் உயிரிழந்து இருப்பார்களா என்று சந்தேகம் எழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

    Also Read: அதிகாரிகளை மிரட்டும் வேலையை விடுங்க.. அதிமுகவினருக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை

    உண்மையை மறைக்கும் காவல்துறை  வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையினரை கண்டித்து திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் கிராமத்தில்  பாக்ஸ்கான் தனியார் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நீதி வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    அதிகாலை சுமார் 4 மணி அளவில் தொடங்கிய மறியல் தொடர்ந்து 7 மணி வரை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பெண் தொழிலாளர்கள் போலீசாரின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Also Read:  நெல்லை விபத்து: பள்ளி கல்வித்துறை அலட்சியபோக்கே காரணம் - ஓபிஎஸ் கண்டனம்

    ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “விடுதி காப்பாளர் மீது திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த விவகாரம் குறித்து தனி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.போராட்டம் வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

    மாயமானது 6 பெண்கள் எனவும் அதில் 4 நபர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .மற்ற இருவர்  வீட்டிற்கு சென்றுள்ளனர் . சம்பந்தப்பட்ட இருவரிடம் வீடியோகால் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Foxconn, Kancheepuram, Protest, Sriperumbudur Constituency, Tamil News, Woman, Workers Strike

    அடுத்த செய்தி