ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Cyclone Nivar | வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயலால் காஞ்சிபுரம் - செங்கல்பட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பின

Cyclone Nivar | வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயலால் காஞ்சிபுரம் - செங்கல்பட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பின

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

Cyclone Nivar | வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயலால் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளன. இதன்படி, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. 254 ஏரிகள் 75 விழுக்காடும், 142 ஏரிகள் 50 விழுக்காடும், 241 ஏரிகள் 25 விழுக்காடும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 ஏரிகள் மட்டுமே 25 விழுக்காட்டிற்கும் குறைவான கொள்ளளவை எட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை 23.30 அடி கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 17.40 அடியை எட்டியுள்ளது. 16.11 அடி கொள்ளளவு கொண்ட கொண்டங்கி ஏரி 13.5 அடி நிரம்பியுள்ளது. பொன்விளைந்த களத்தூர் ஏரியில் 11.9 அடி நீர் நிரம்பியுள்ளது. 16 அடி கொள்ளளவு கொண்ட கொளவாய் ஏரி 12.9 அடியை எட்டியுள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் 22 அடியை எட்டியுள்ளது.

மேலும் படிக்க...Cyclone Nivar: கரையைக் கடந்த நிவர் புயல்: 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்

வடகிழக்கு பருவமழைக்கு இடையே நிவர் புயல் உருவானதால் தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்காளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளன.

First published:

Tags: Chembarambakkam Lake, Chengalpet, Chennai, Cyclone Nivar, Monsoon rain, Nivar, Northeast monsoon