ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Cyclone Nivar | தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

Cyclone Nivar | தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் குறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னையிலிருந்து 470 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்திலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும். நேற்று மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வேகம் குறைந்து 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

நிவர் புயல் நாளை மாலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க.. தமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை..

சாலையில் தண்ணீர் தேங்கவும், மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cyclone Nivar, Nivar, Tamil Nadu, Weather