குன்றத்தூரில் இளம் பெண் மீது கொலைவெறி தாக்குதல், அரிவாள் வெட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம்குன்றத்தூர் பெரியார் நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்துமதி(வயது30).இவர் குன்றத்தூர் மேத்தா நகரில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக குன்றத்தூர் - பல்லாவரம் சாலை, மணஞ்சேரி அருகே தனது தோழியைய் பார்க்க நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் சிந்துவை சரமாரியாக முகம் ,கழுத்து, முதுகு பகுதியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் வெட்டுக் காயத்தில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சிந்து மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்துரு, சப் இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாயபரத் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வெட்டுக்காயங்களுடன் இருந்த இந்துவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இந்துவின் கணவர் பத்மகுரு கோழி கறி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி சிந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டு விட்டு வந்துள்ளார்.
அதுகுறித்து கேட்க அந்த பெண்ணின் தரப்பினர் பத்மகுரு வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆத்திரமடைந்த பத்மகுரு கத்தியை எடுத்து குத்தியதில் மத்திய அரசு ஊழியரான குமரன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். ஒருவர் காயமடைந்தார். இந்த கொலை வழக்கில் பத்மகுரு சிறையில் இருக்கும் நிலையில் தனது கணவரை ஜாமீனில் எடுப்பதற்கு அவரது உறவினர்கள் உதவி செய்யவில்லை என்றும் தன்னை கணவருடன் சேர்ந்து வாழாமல் இருக்க பத்மகுருவின் உறவினர்கள் சதி செய்து வருவதாக சிந்து கூறியதாகவும்கூறப்படுகிறது.
மேலும் இறந்து போன குமரனின் கொலைக்கு பழி வாங்க எதிர் தரப்பினர் இந்துவை கொலை செய்ய திட்டம் தீட்டி வெட்டி விட்டு சென்றார்களா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை வழக்கில் சிறையில் உள்ள நபரின் மனைவியை மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இளம்பெண்ணை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
செய்தியாளர்: சோமசுந்தரம்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.