• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காஞ்சிபுரத்தில் விரக்தியில் கொரோனா நோயாளி தற்கொலை

காஞ்சிபுரத்தில் விரக்தியில் கொரோனா நோயாளி தற்கொலை

Youtube Video

கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையில் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் வரதப்பா நகரை சேர்ந்தவர் 54 வயதுடைய கோபாலகிருஷ்ணன். இவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், பொன்னேரிக்கரை அருகே உள்ள மீனாட்சி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சோதனை மேற்கொண்டார்.

    அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கோபாலகிருஷ்ணனுக்கு தொற்று கடுமையாக இருந்ததால் மருத்துவமனையில் தனியறை ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் உட்பட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    தனிமையில் கொரோனா அச்சத்தில் ஒருவாரமாக இருந்த அவருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளித் தொடர்பு இல்லாமல், நோயின் பிடியில் அவதிப்பட்டு வந்த அவர் அடிக்கடி மருத்துவமனையின் 3வது மாடிக்குச் சென்று தனிமையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் மருத்துவமனை மாடியில் அமர்ந்திருந்த அவர், யாரும் கவனிக்காத நேரத்தில் திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் படிக்க...  Pregnancy Corona | கொரோனா 2வது அலை... கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு என தகவல்...

    விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கோபாலகிருஷ்ணன் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.



    இதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 56 வயதுடைய சண்முகம் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்போரூர் பகுதியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    உடல்நிலை மோசமான நிலையில், மன அழுத்தத்தில் இருந்த அவர், மருத்துவமனையின் மொட்டை மாடியில் ஆள் அரவமற்ற இடத்தில் குடிநீர் பைப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் சேர்த்து பயத்தை போக்க மனநல ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    -----------------------------------------------------------------------------------------------

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: