காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு காரணமாக, இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய மயானத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 260 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 115 சாதாரண படுக்கைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பல மணிநேரம் மருத்துவமனை வாசலிலேயே ஆக்ஸிஜன் படுக்கைகளுக்காக காத்திருக்க வேண்டிய சிரமமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் காஞ்சிபுரம் எரிமேடை
மயானத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் 2 நவீன எரிமேடை மயானம் மட்டுமே உள்ளதால், உயிரிழந்தவர்களின் உடலை வைத்து கொண்டு எரி மேடை மயானத்தில் பல மணி நேரம் காத்திருந்து தகனம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடலை வைத்து கொண்டு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையால் உறவினர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
செய்தியாளர் - சந்திரசேகர் ராமசந்திரன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.