தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 671-ஆக உயர்வு..

கோப்புப் படம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 • Share this:
  தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து உச்சம் தொட்டது. நாள் ஒன்றுக்கு, பாதிப்பு 6000-ஐத் தாண்டியதால், மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது.ஆனால், கொரோனா கட்டுபாட்டு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டதால் நவம்பர் மாதத்துக்குப் பின் படிப்படியாக குறையத் தொடங்கியது.

  டிசம்பரில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து கீழ் குறைந்ததுடன்,ஜனவரி 16-ல் இருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதும் 500-க்குள் கீழ் குறைந்தது.ஆனால், கடந்த சில நாட்களாக சென்னை, அதை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர் என6 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

  இந்நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் 275 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 671 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,56,000-ஐக் கடந்துள்ளது.

  மேலும் படிக்க.. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ... தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவல் அபாயம்

  ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி ஐந்து பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 12,530-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், 532 பேர் குணமடைந்ததால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,40,000-ஐக் கடந்துள்ளது. இருப்பினும் மாநிலம் முழுவதும் 4207 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: