• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இஸ்லாமியர்கள் தொழுகையின்போது பிரசாரத்தை நிறுத்தி காத்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இஸ்லாமியர்கள் தொழுகையின்போது பிரசாரத்தை நிறுத்தி காத்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி(மாதிரிப் படம்)

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி(மாதிரிப் படம்)

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சூழ்ச்சி செய்து முதலமைச்சர் ஆனதாக, காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர், முன்னதாக ராமானுஜர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, யானைக்கு உணவு வழங்கிய முதல்வர், அதனிடம் ஆசியும் பெற்றார். அதையடுத்து, பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர், நாட்டு மக்களுக்கான கட்சி திமுக இல்லை எனவும், அது அவர்களது வீட்டு மக்களுக்கான கட்சி எனவும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர் தான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதலமைச்சர் அல்ல என்ற மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கும் விளக்கமளித்தார்.

    தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மறைந்த கருணாநிதி எப்படி முதலமைச்சர் ஆனாரோ, அதே பாணியில் தான் தானும் முதலமைச்சர் ஆனதாகவும் கூறினார்.

    வாலாஜா பேருந்து நிலையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானாலும், தமிழகத்தில் அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் என மு.க.ஸ்டாலினுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

    இதனிடையே, காஞ்சிபுரம் தேரடி பகுதியில் முதலமைச்சர் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த போது, அருகே மசூதியில் இருந்து பாங்கு ஒலி கேட்டது. அதையடுத்து, தனது பேச்சை நிறுத்திய முதலமைச்சர், பாங்கு ஒலி நிற்கும் வரை அமைதி காத்து, பிறகு தனது பரப்புரைய தொடந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: