அண்ணா நினைவுநாள்: மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி

ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

இந்த அமைதிப் பேரணி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நிறைவு பெற்றது.

 • Share this:
  மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

  இந்தப் பேரணி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா சமாதிவரையில் நடைபெற்றது. பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிரிவாகிகள் உட்பட ஏராளமான திமுக தொண்டர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். கைகளில், அண்ணாவின் உருவப்படம் ஏந்தி தொண்டர்கள்  அமைதியாகச் சென்றனர்.

  மலர் வளையம்


  இந்த பேரணி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நிறைவு பெற்றது. அங்கே, அண்ணா சமாதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

  இதனைத் தொடர்ந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  இந்நிலையில்,  காஞ்சிபுரம் காந்தி சாலையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுடன் அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

  மேலும் படிக்க... இரண்டாம் உலகப் போர் வீரர் கேப்டன் டாம் மூர் காலமானார்

  அவர், பெருநகராட்சி நோக்கி நடந்து சென்று அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  Published by:Suresh V
  First published: