ஆந்திர மாநிலத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக 5 துணை முதல்வர்களை அறிவித்தார். அப்போதே நடிகை ரோஜா அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவெடுத்து அனைத்து அமைச்சர்களிடமும் ராஜினாமா கடிதம் கேட்டார். இதையடுத்து ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் நடிகை ரோஜா இடம் பெற்றார்.
ரோஜா அமைச்சரவையில் இடம் பெற்ற பிறகு, தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பிரார்த்தனை செய்ய வருகை தந்துள்ளார். அதன்படி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் அமைச்சரும் நடிகையுமான ரோஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அபோது, ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைத்ததற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
தாய் வீடான ஆந்திராவில் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க பிரதனை செய்தார்கள். தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு, இங்கேயும் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என எதிர்பார்த்தார்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
Must Read : மதுரையே அதிர வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்...
முதல் படம் நடித்ததில் இருந்து தற்பொழுது வரை ஆண்டுதோறும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்வேன். என்னோட வேண்டுதலை அம்பாள் நிறைவேற்றியுள்ளார் அதற்கு பிரார்த்தனையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பிரார்த்தனை செய்ய உள்ளேன். எந்த ஒரு காரியம் செய்தாலும் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்கிய பின்தான் தொடங்குவேன்.
எனது தாய் வீடு ஆந்திரா மக்களும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி என்று நடிகை ரோஜா கூறினார்.
செய்தியாளர் - சந்திரசேகர், காஞ்சிபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Roja, Kancheepuram, Temple