முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த முதல்வர் விஜய்தான்: வேட்புமனு தாக்கலின்போது காஞ்சியை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்!

அடுத்த முதல்வர் விஜய்தான்: வேட்புமனு தாக்கலின்போது காஞ்சியை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்!

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளரை ஆதரித்து 200க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் படப்பை பேருந்து நிலையத்திலிருந்து விஜய் ரசிகர் மன்ற கொடியை பிடித்தவாறு அடுத்த முதல்வர் விஜய் என கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் பேரணி வந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காஞ்சிபுரம் அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படப்பையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில்  தமிழ்செல்வன் என்பவர் வடக்குபட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, அடுத்த முதல்வர் விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் வந்தனர்.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடந்த 17-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 20 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தற்போது தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும்  விஜய் ரசிகர்கள் போட்டியிட இருப்பதாக ரசிகர்கள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்து ex.mla  ஆலோசனையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேற்கு ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விஜய் ரசிகர் மன்றம் வேட்பாளர் M.தமிழ்ச்செல்வன் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் காஞ்சி மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளரை ஆதரித்து 200க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் படப்பை பேருந்து நிலையத்திலிருந்து விஜய் ரசிகர் மன்ற கொடியை பிடித்தவாறு அடுத்த முதல்வர் விஜய் என கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் பேரணியாக நடந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அப்பாதுரை, வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் சிவா, விருதுநகர் மாவட்ட தலைவர் வெயில் முத்து, விருதுநகர் விவசாய அணி தலைவர் கோகுல் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Kancheepuram, Local Body Election 2021, News On Instagram