ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை வசதி அமைக்க கோரி மனு...!

அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை வசதி அமைக்க கோரி மனு...!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சரண்யாவுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை எனவும், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வழங்கவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அரசு அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர் வசதிகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்துறை அலுவலகத்தில் பணியாற்றிய மாற்றுத் திறனாளி ஊழியர் சரண்யா, இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வகை செய்யும் சட்டம் 1995ம் ஆண்டு இயற்றப்பட்ட போதும், கடந்த 25 ஆண்டுகளாக காகித அளவிலேயே இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சரண்யாவுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை எனவும், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வழங்கவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதனால் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனவும், அனைத்து மாவட்டங்களிலும், அரசு அலுவலகங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Also read... இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, மாடுகள், கோழிகள் துன்புறுத்தப்படாமல் எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் - நீதிமன்றம்!

இதுதவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிப்பறை, குடிநீர் வசதிகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court