காஞ்சிபுரத்தில் மதுபானத் தகராறால், ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவரது உடல் குட்டையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கை அப்பாவு நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர், கடந்த ஐந்தாம் தேதி இரவு மதுபானக்கடைக்கு சென்று மது அருந்தினார். அப்போது அங்குவந்த பாலு மற்றும் குமரன் ஆகிய இருவரிடம் சரவணன் வாய்த் தகராறில் ஈடுபட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சரவணனின் வீட்டிற்குச் சென்ற பாலு, சரவணனின் தந்தையிடம் புகார் கூறியுள்ளார். இதனால், சரவணன் ஆத்திரமடைந்தார். இதையடுத்து, பாலு மற்றும் குமரன் ஆகியோரது வீட்டருகே சென்று, அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், பாலு அருகில் இருந்த கட்டையால் சரவணனை தலையில் தாக்கியதில் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். பின்னர் செய்வதறியாது திகைத்த இருவரும், சரவணனின் உடலை அருகில் இருந்த குட்டையில் வீசி எறிந்தனர்.
குட்டையில் உடல் மிதந்ததைக் கண்டு விசாரணையைத் தொடங்கிய காஞ்சிபுரம் போலீசார், ஒரு மணிநேரத்தில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். காவலர்களின் அதிவேக விசாரணையை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் வெகுவாகப் பாராட்டினார்.
செய்தியாளர்: சந்திரசேகர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.