திமுக வேட்பாளர் பட்டியலில் 9 மருத்துவர்கள், 28 வழக்கறிஞர்கள் - முழு விவரம்

அண்ணா அறிவாலயம்

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்டபாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 173 வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்ததால், திட்டமிட்டபடி வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத சூழல் உருவானது.

  இதையடுத்து இன்று காலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக வெளியிட்டுள்ள பட்டியலில் 9 மருத்துவர்கள், 28 வழக்கறிஞர்கள் உள்ளனர். மேலும் 13 பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  திமுக வேட்பாளர்களில் 9 மருத்துவர்கள்

  1.புதுக்கோட்டை-Dr.முத்துராஜா
  2.ஆலங்குளம் - Dr.பூங்கோதை
  3.பொள்ளாட்சி - Dr.வரதராஜன்
  4.இராசிபுரம் - Dr.மதிவேந்தன்
  5. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண்
  6. விழுப்புரம்- Dr.லட்சுமணன
  7.மைலம்- Dr.மாசிலாமணி
  8.பாப்பிரட்டிப்பட்டி- Dr.பிரபு ராஜசேகர்
  9.ஆயிரம் விளக்கு- Dr.எழிலன்

  திமுக வேட்பாளர்களில் 28 வழக்கறிஞர்கள்:

  1. 1.ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்

  2. பெரம்பூர்- ஆர்.டி.சேகர்

  3. திரு.வி.க.நகர்- தாயகம் கவி

  4. எழும்பூர்- பரந்தாமன்

  5. சைதை- மா.சுப்பிரமணியன்

  6. மைலாப்பூர்- த.வேலு

  7. மாதவரம்- எஸ்.சுதர்சனம்

  8. திருத்தணி - எஸ்.சந்திரன்

  9. பூவிருந்தவல்லி- ஆ.கிருஷ்ணசாமி

  10. காஞ்சிபுரம்- சி.வி.எம்.பி.எழிலரசன்

  11. காட்பாடி- துரைமுருகன்

  12. பாலக்கோடு- பி.கே.முருகன்

  13. சேலம் வடக்கு- இரா.ராஜேந்திரன்

  14. பழனி- ஐ.பி.செந்தில்குமார்

  15. கிருஷ்ணராயபுரம்- க.சிவகாமசுந்தரி

  16. பெரம்பலூர்- எம்.பிரபாகரன்

  17. சீர்காழி- மு.பன்னீர்செல்வம்

  18. நன்னிலம்- எஸ்.ஜோதிராமன்

  19. திருவிடைமருதூர்- கோ.வி.செழியன்

  20. திருவையாறு- துரை.சந்திரசேகர்

  21. ஒரத்தநாடு- எம்.ராமசந்திரன்

  22. பட்டுக்கோட்டை- கா.அண்ணாதுரை

  23. திருமயம்- எஸ்.ரகுபதி

  24. முதுகளத்தூர்- ஆர்.எஸ்.இராஜகண்ணப்ப்ன்

  25. விளாத்திக்குளம்- ஜி.வி.மார்க்கேண்டயன்

  26. ஓட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகய்யா

  27. சங்கரன்கோவில்- ஈ.ராஜா

  28. அம்பாசமுத்திரம்- இரா.ஆவுடையப்பன்


   
  Published by:Vijay R
  First published: