கொரோனா 2ஆவது அலை: சென்னையில் 18 விமானங்கள் ரத்து

விமானம்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

  • Share this:
    கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் தமிழகத்தில் நோய் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருன்கிறது. குறிப்பாக சென்னை மாநகா் பகுதி மற்றும், அதை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைகக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்வாசிகள் குறிப்பாக வடமாநிலத்தவா்கள் தங்களுடைய சொந்த ஊா்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். அதேபோல வெளியூா் வாசிகள் சென்னை நகருக்கு வரும் பயணங்களை பெருமளவு குறைத்து, பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

    அதன்படி, சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து சென்னை வரும் உள்நாட்டு விமானங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் போ் வருகை தந்தனர். ஆனால் தற்போது அதுபடிப்படியாக குறைந்து நேற்று சுமார் 5,500 போ் மட்டுமே வருகை தந்துள்ளனர்.

    அதே போல சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் போ் பயணித்தனா். ஆனால் அதுவும் தற்போது குறைந்து நேற்று சுமார் 6,500 போ் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.

    செப்டம்பர் 2020-ல் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை இதைப்போல் குறைவாகவே இருந்தது. அதைப் போன்ற 8 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு பயணிகள் எண்ணிக்கை பின்நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

    சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் நேற்று பல விமானங்கள் போதிய பயணிகள் இன்றி காலியன பல இருக்கைகளுடன் இயக்கப்பட்டன. பெங்களூரிலிருந்து வந்த 2 விமானங்களில் 1, 8 பயணிகளும், ராய்ப்பூரிலிருந்து வந்த விமானத்தில் 3 பயணிகளும், மங்களூா் மற்றும் கோவை விமானங்களில் தலா 5 பயணிகளும், கோழிக்கோட்டிலிருந்து வந்த விமானத்தில் 7 பயணிகளும், ஹைதராபாத்திலிருந்து வந்த விமானத்தில் 8 பயணிகளும், மற்றும் மைசூரில் இருந்து வந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணித்தனா்.

    இந்நிலையில், நேற்று போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஹைதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூரு, மதுரை, பாட்னா செல்ல வேண்டிய தலா 1 விமானங்கள் என 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதைப்போல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த 9 விமானங்களும் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.

    2020 டிசம்பரில் இருந்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து விமானநிலையம் மீண்டும் பயணிகள் எண்ணிகை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அது அதிக நாட்கள் நீடிக்காமல் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மீண்டும் படிப்படியாக குறைந்து தற்போது சென்னை உள்நாட்டு விமானநிலையம் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

    Must Read : தமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பு... இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தபடியே நோன்பு திறக்க அறிவுறுத்தல்...

     

    இதே நிலை தொடர்ந்து நீடித்தால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் மேலும் பல விமானங்கள் ரத்தாகும் நிலை ஏற்படும் என கூறப்படுகின்றது.

    தமிழகத்தில் கொரேனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: