Home /News /tamil-nadu /

காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறியதாக 1,024 பேர் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறியதாக 1,024 பேர் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் போலீஸார் வாகன சோதனை

காஞ்சிபுரம் போலீஸார் வாகன சோதனை

Kanchipuram : காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று திருமண விழாக்கள் நடைபெற்று வந்ததையொட்டி, ஏராளமான பொதுமக்கள் அழைப்பிதழ்களை காட்டி, திருமணத்திற்கு சென்று வந்தபடி இருந்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை மீறியதாக மொத்தம் 1,024 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்தவர்களிடமிருந்து 2,04,800 ரூபாய் அபராதம் வசூலித்து, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவினை அமல் படுத்தி வருகிறது. இந்நிலையில் 3வது வாரம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது.

    ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையிலும், தை மாத முகூர்த்த நாளான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருமண விழாக்கள் நடைபெற்று வந்ததையொட்டி ஏராளமான பொதுமக்கள் அழைப்பிதழ்களை காட்டி, திருமணத்திற்கு சென்று வந்தபடி இருந்தனர்.

    இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து காணப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும், என 1,024 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    Must Read : எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

    மேலும், முழு ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து அபராதமாக
    2 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூலித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    செய்தியாளர் - ஆர்.சந்திரசேகர், காஞ்சிபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kanchipuram, Lockdown, Police

    அடுத்த செய்தி