ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால சிற்பத் தொகுப்பு - உத்தரமேரூர் பகுதியில் கண்டெடுப்பு

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால சிற்பத் தொகுப்பு - உத்தரமேரூர் பகுதியில் கண்டெடுப்பு

 சப்த மாதர்கள்

சப்த மாதர்கள்

உத்தரமேரூர் அருகே 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சப்தமாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டுபிடிப்பு

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் தலைமையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த சிற்பத் தொகுப்பை கண்டறிந்தனர். இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் கூறுகையில் , “நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்பத் தொகுப்பானது ஒரே பலகைக்கல்லில் 1 1/2 அடி உயரம்    4 1/2 அடி நீளம் கொண்ட எழுவர் அன்னை எனப்படும் சப்த மாதர்கள் தொகுப்பு ஆகும் .இவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன்  அமர்ந்த நிலையில் இரு கரங்களுடன்இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி  காணப்படுகிறார்கள்.

  கொற்றவைஆதன்

  முதலில் பிராமியும் இரண்டாவதாக மகேஸ்வரியும் மூன்றாவதாக கௌமாரியும் நான்காவதாக வைஷ்ணவியும் ஐந்தாவதாக வராகியும் ஆறாவதாக இந்திராணியும் ஏழாவதாக சாமுண்டியும் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள். பொதுவாக இவர்களுடன் கணபதி மற்றும் வீரபத்திரர் இருப்பார்கள் ஆனால் இங்கு அவர்கள் காணப்படவில்லை இவ்வூர் மக்கள் இதை அலையாத்தி அம்மன் என்கிறார்கள் ஆனால் இது எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் ஆகும்.

  Also Read:  Shocking Video: விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்கூட்டி.. அடுத்த கணமே நடந்த அதிர்ச்சி சம்பவம்

  இது தாய்த்தெய்வ வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும் உலகெங்கிலும் தாய் தெய்வ வழிபாடு என்பது நீக்கமற நிறைந்துள்ளது. வளமையின் அடையாளமாக வேளாண்மை செழிக்க செல்வ வளம் பெருக குழந்தைகள் நோய் நொடி இன்றி வாழவெற்றியின் அடையாளமாக மன்னர்கள் நாட்டை வென்றிட இன்ன பிற நன்மைகள் வேண்டி மன்னர் முதல் மக்கள் வரை வழிபட்டது தாய்வழி வழிபாடாகும். இதன் முதல் வழிபாடாக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாக இந்த எழுவர் அன்னையர் வழிபாடு உள்ளது .

  சிற்பத்தொகுப்பு

  பாண்டியர்கள், பல்லவர்கள் ,சோழர்கள், விஜயநகர மன்னர்கள் வரை சிறந்த வழிபாடாக இவ்எழுவர் கன்னியர் வழிபாடு தொடர்கிறது. தமிழகத்தின் மிகப் பழமையான முக்கிய கோயில்களில் ஒன்றான காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் இந்த சிற்பங்கள் இன்றைக்கும் காட்சியளிக்கின்றன.

  Also Read: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி

  சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, திருமந்திரம்முதலிய நூல்களில் எழுவர் அன்னையர் வழிபாடு குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன இன்றைக்கும் தமிழக கிராமங்களில் ஊர் திருவிழாக்களில் முதல் படையல் மற்றும் பலி இவர்களுக்கு கொடுத்த பிறகே மற்றவை நடைபெறுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கிபி ஆறாம் நூற்றாண்டில் பிருகத்சம்கிதை என்கிற நூலில் எழுவர் அன்னையர் தோற்றம் குறித்த  குறிப்புகள் கிடைக்கின்றது சிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் போர் நடக்கிறது அந்தகாசுரன் உடலில் இருந்து சொட்டும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒவ்வொரு அந்தகாசூரர்களாக மாறி  பெரும் போர் புரிந்தார்கள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் தன் நாக்கு தீச்சுவாலையிலிருந்து  மகேஸ்வரி எனும் பெண் சக்தியை உருவாக்கினார். இதேமுறையில் பிரம்மா பிராமியையும் விஷ்ணு வைஷ்ணவியையும் முருகன் கௌமாரியையும் இந்திரன் இந்திராணியையும் திருமால் வாராகியையும் எமன் சாமுண்டியையும் பெண் சக்திகளாக உருவாக்கி போர் புரிந்தார்கள். இவ்எழுவரும் அசுரர்களின் ரத்தத்தை குடித்து இந்த பெரும் போரை முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள் இப்படித்தான் எழுவர் அன்னையர்கள் உருவானார்கள்.

  நாங்கள் கண்டெடுத்த இந்த புடைப்பு சிற்பதொகுப்பானது சோழர் காலத்தைச் சார்ந்த  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்த பக்திவரலாற்று கலைபொக்கிஷங்களை பாதுகாப்பது நம் கடமையாகும்” எனத் தெரிவித்தார்.

  செய்தியாளர்: சந்திரசேகர்

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Sand sculptures, Tamilnadu, Uthiramerur Constituency