காஞ்சிபுரத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த பாதிப்பு 3,584ஆக உயர்வு

காஞ்சிபுரத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த பாதிப்பு 3,584ஆக உயர்வு
(கோப்புப் படம்)
  • Share this:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரையில் 3,218 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதியதாக 366 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையைக் கடந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இன்று, காஞ்சிபுரத்தில் 366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்து 8, 9 தேதிகளில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் 310 மற்றும் இன்று 56 என மொத்தம் 366 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் நகராட்சியில் 210 நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 45 நபர்களும், காஞ்சிபுரம் வட்டத்தில் 7 நபர்களும், உத்திரமேரூரில் 12 நபரும், வாலாஜாபாத்தில் 36 நபர்களும், குன்றத்தூரில் 8 நபர்களும், ஐய்யப்பந்தாங்கலில் 5 நபர்களும் மாங்காட்டில் 10 நபர்கள் உள்பட மாவட்டத்தில் 366 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,584 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் தொற்று காரணமாக 2,245 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1,293 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழப்பு 46 ஆக உள்ளது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெருநகராட்சியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 850க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் பெருநகராட்சியில் பகுதியில் தற்பொழுது பரிசோதனைகள் அதிகப்படுத்தியுள்ளதால் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading