காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் பலி!

விபத்தின்போது பக்கத்து வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் மஸ்தான் என்பவரும் உயிரிழந்தார்.

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் பலி!
வெடி விபத்து நடந்த இடம்
  • News18
  • Last Updated: October 23, 2018, 10:22 PM IST
  • Share this:
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் உயிரிழந்தனர்.  தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஷாகீரா பானு, முஸ்தக் பாட்ஷா ஆகியோர் தங்கள் வீட்டில் நாட்டு வெடிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றி வெடி வெடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின்போது பக்கத்து வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் மஸ்தான் என்பவரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஷாகீரா பானுவும் முஸ்தக் பாட்ஷாவும் அனுமதியின்றி வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
First published: October 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்