காஞ்சிபுரம் அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து: நாளை முதல் இலவசம்!

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 1, 2019, 8:12 PM IST
காஞ்சிபுரம் அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து: நாளை முதல் இலவசம்!
காஞ்சிபுரம் அத்திவரதர்
Web Desk | news18
Updated: July 1, 2019, 8:12 PM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சுவாமியை வழிபட வரும் பக்தர்களின் வசதிக்காக 50 ரூபாய் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதர், வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

தைலகாப்பு பூசப்பட்டு இன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர், 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.உள்ளூர் பக்தர்கள் ஜூலை 1, 2, 3 உள்பட குறிப்பிட்ட 26 நாட்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரை தரிசிக்கலாம். உள்ளூர் பக்தர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து முன்பதிவு செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதற்காக 14 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read:அத்திவரதரை தரிசிப்பது எப்படி?

விஐபிக்கள் தினமும் காலை 6 முதல் 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதைத்தொடர்ந்து காலை 9 முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனமாக  பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு என சிறப்பு தரிசனத்திற்காக ஒதுக்கப்பட்ட 26 நாட்களை தவிர பிற நாட்களில் மாலை நேரத்தில் பொதுதரிசன பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம்.

Also Wach : சயனக் கோலத்தில் எழுந்தருளிய அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனக்காட்சி!

இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர். விஐபி தரிசனத்தில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக வசந்த மண்டபத்திற்கு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்காக 6 பேட்டரி கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கிழக்கு கோபுரம் வாசல் வழியாக வசந்த மண்டபத்திற்கு அழைத்துசெல்லப்படுவார்கள்.

இந்நிலையில் பக்தர்களுக்கான கூட்டநெரிசலை தவிர்க்க 50 ரூபாய் சிறப்பு கட்டணம் தரிசனத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Also Watch

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...