அத்திவரதர் வைபவத்திற்காக இயக்கப்பட்ட சிறப்பு மினி பேருந்துகள் - 32 நாட்களில் ₹ 1.50 கோடி வசூல்

5 நிமிடங்களுக்கு ஒருமுறை இரு மார்க்கத்திலும் இயக்கப்படுவதால் காத்திருக்காமல் பயணிக்க முடிவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Web Desk | news18
Updated: August 3, 2019, 8:44 AM IST
அத்திவரதர் வைபவத்திற்காக இயக்கப்பட்ட சிறப்பு மினி பேருந்துகள் - 32 நாட்களில் ₹ 1.50 கோடி வசூல்
அத்திவரதர் கோவொலுக்கு செல்லும் 45 மினி பேருந்துகள்
Web Desk | news18
Updated: August 3, 2019, 8:44 AM IST
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகர் முழுவதும் 45 மினிபேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் நகர் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிக பேருந்து நிலையம் அருகே தடுத்து நிறுத்தப்படுகிறது. இதனால், பக்தர்கள் மினி பேருந்து மூலம் கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அத்திவரதர் கோசிலுக்கு 45 சிறப்பு மினி பேருந்துகள் இயக்கம்இவ்வாறு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இரு மார்க்கத்திலும் இயக்கப்படுவதால் காத்திருக்காமல் பயணிக்க முடிவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 32 நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் கோயிலுக்கு பேருந்து மூலம் பயணித்ததால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆடிப்பூரத்தையொட்டி, ஆண்டாள் திருக்கல்யாணம் இன்று நடைபெறுவதால், அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இரவு 8 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... சாலை விதிகளை பின்பற்றினால் 2 சினிமா டிக்கெட்கள்

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...