அத்திவரதரை தரிசிக்க பட்டாக்கத்திகளுடன் வந்த 4 பேர் கைது!

அத்திவரதர் வைபவத்தில் அன்னதானத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்தார்.

Web Desk | news18
Updated: August 2, 2019, 8:08 AM IST
அத்திவரதரை தரிசிக்க பட்டாக்கத்திகளுடன் வந்த 4 பேர் கைது!
அத்திவரதர்
Web Desk | news18
Updated: August 2, 2019, 8:08 AM IST
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தரிசனக் கூட்டத்தில் பட்டாக்கத்திகளுடன் வந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 31 நாட்களாக 46 லட்சம் பேர் தரிசனம் செய்த நிலையில், 32-வது நாளான நேற்று, நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளித்தார்.

17 நாட்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தர உள்ளதால், அதிக அளவிலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 40,000 பேர் சாமி தரிசனம் செய்தனர்.


இந்நிலையில், அத்திவரதர் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில், இதுவரை ஆன்லைன் மூலம் 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அன்னதானத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்தார். அன்னதானம் வழங்க 46 தன்னார்வ அமைப்பினர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசிக்க  சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் வந்துள்ளனர். அவர்களை போலீசார் விசாரிக்கையில் அவர்களது கையில் பட்டாக்கத்திகள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...

ஏற்கனவே, ரவுடி வரிச்சூர் செல்வம் அத்திவரதரை விஐபி சலுகையுடன் தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...