• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் மோதல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் மோதல்

  • Last Updated :
  • Share this:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவத்தின்போது பிரபந்தம் பாடுவதில் அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்த இரு உட்பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை முன்னிட்டு சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி தேவராஜ சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், ஆராதனை நடைபெற்றது. இந்த நிலையில், உற்சவத்தின்போது தென்கலை அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர். இதற்கு வடகலை பிரிவைச் சேர்ந்த அய்யங்கார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபந்தங்களை பாடக்கூடாது என நீதிமன்ற உத்தரவை வடகலை அய்யங்கார்கள் சுட்டிக்காட்டியதால், இரு பிரிவினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காஞ்சி போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருதரப்பினர், சுவாமி முன்பு பிரபந்தங்களை ஆவேசமாக பாடினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: