எங்க ஊரு பெயர் காணோம்..! - வடிவேலு பாணியில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்
எங்க ஊரு பெயர் காணோம்..! - வடிவேலு பாணியில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்
பொதுமக்கள் போராட்டம்
Kancheepuram : வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி பாணியில் 'எங்கள் ஊரின் பெயரை காணவில்லை என பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிமேடு என்ற பகுதியில் பேருந்து நிறுத்தம் பெயர் பலகை சில நாட்களுக்கு முன்பு அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்ததிற்கான பெயர் பலகையில் குறிமேடு என்ற பெயருக்கு பதில் சின்னப்பணிச்சேரி பேருந்து நிறுத்தம் என பெயரிடப்பட்டிருந்ததால் குறிமேடு பகுதி ஊர் குடியிருப்புவாசிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.
அப்போது அவர் 'அரசின் பதிவேட்டில் உள்ளதை தான் நாங்கள் பெயர் பலகையில் வைத்துள்ளோம் ' என பதில் கூறியுள்ளார்.
அதன்பின் பல அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் பெயர் பலகையில் பெயர் மாற்றப்படாததால் 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த மாங்காடு காவல் ஆய்வாளர் ராஜி போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களிடம் சமாதானம் பேசி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படடும் என உறுதி அளித்தததை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணவில்லை என புகார் அளிப்பார். அந்த பட பாணியை போல பேருந்து நிறுத்த பெயர்பலகையில் தங்கள் ஊர் பெயர் காணவில்லை என மக்கள் சாலை மறியல் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : சோமசுந்தரம்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.