காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு

சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு
மகன் கனலரசன் மருமகன் மனோஜ்
  • Share this:
வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க முன்னால் எம்.எல்.ஏவுமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மருமகன் மனோஜை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது.

காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் குருவின் நினைவிடம் அருகே குருவின் மகன் கனல் மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோரை ஒரு கும்பல் மறித்து பிரச்சனை செய்ததாகவும், பின்னர் ஊர்மக்கள் அங்கு வந்து அவர்களைப் பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

காடுவெட்டி ஊராட்சி மன்ற தலைவரும் பாமக பிரமுகருமான சின்ன பிள்ளை அவரது தம்பி காமராஜ், காமராஜ் மகன் சதீஷ் ஆகியோருக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி அரிவாள் வெட்டு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மருமகன் மனோஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்புக்காக காடுவெட்டி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also see...
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading