• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர், உறவினர் கைது

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர், உறவினர் கைது

கனகராஜின் சகோதரர், உறவினர் கைது

கனகராஜின் சகோதரர், உறவினர் கைது

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில், கனகராஜின் வாகன விபத்தில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுனர்.

  • Share this:
கடந்த 2017-ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல் கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யபட்டார். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அதனையடுத்து சயான், வாளையாறு மனோஜ், தீபு உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோடநாடு சம்பவம் குறித்து கூடுதல் விசாரணைக்கு அனுமதி கோரி கோத்தகிரி காவல்துறையினர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் தற்போது கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான தனி படை போலிசார் கடந்த இரண்டு மாதமாக குற்றம்சாட்டபட்டவர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக முதல் குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள சயான்,  ஜம்சீர் அலி, சந்தோஷ் சாமி, மனேஷ் சாமி, சதீஷன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தபட்டது. இவர்களை தவிர கனகராஜ் சகோதரர் தனபால், கனகராஜ் மனைவி, கனகராஜ் மைத்துனர், சென்னையில் கனகராஜ் தங்கியிருந்த அறை நண்பர்கள், கனகராஜ் பணிபுரிந்த தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 40-க்கும் மேற்ப்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலன் விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் சாலை விபத்தில் இறந்த கனகராஜ் வழக்கையும் காவல்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் மறு விசாரணை செய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் மூலையாக செயல்பட்ட  ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கும் தொர்பு உள்ளதாக கூறி தனி படை போலிசார் அவரை கைது செய்தனர்.

மேலும் கனகராஜின் உறவினரான சேலம் ஆத்துரை சேர்ந்த ரமேஷ் என்பவரும் கைது  செய்யபட்ட நிலையில், இருவரையும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டனர். அவர்கள் இருவரையும் 08-11-21 வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி சஞ்ஜை பாபா உத்தரவிட்டார். அதனையடுத்து இருவரும் கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

கோடநாடு கொள்ளை சம்பவம் நடைபெறும் முன்பே தனபால் மற்றும் ரமேசுக்கு தகவல் தெரிந்தும் காவல் துறையினரின் விசாரணையின் போது மறைத்து உள்ளனர். அதே போல கனகராஜ் வாகன விபத்து நடைப்பெற்ற பின் அவரது செல்போனில் ஆதரங்களை அழித்துள்ளதாகவும், இரு வழக்கின் சில முக்கிய சாட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் அனுகி விசாரணை அழைத்தால் குறிப்பிட்ட தகவல்களை மட்டும் சொல்வேண்டுமென கூறியதாகவும் குற்றசாட்டின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனி படை போலிசார் கைது செய்துள்ளனர். தனது தம்பி கனகராஜின் மரணத்தில் சந்தோகம் இருப்பதாக தெரிவித்த சகோதரர் தனபால் தற்போது சாட்சிகளை அழித்ததன் புகாரில் கைது செய்து இருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Must Read : Ration Card: பெண்களுக்கான குடும்ப அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

இந்நிலையில், இந்த இரு வழக்கிலும் கைது நடவடிக்கை தொடரும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: