மக்கள் நீதி மய்யத்திலிருந்து கமீலா நாசர் திடீர் விலகல்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து கமீலா நாசர் திடீர் விலகல்

கமல்ஹாசன் உடன் கமீலா நாசர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்ததிலிருந்தே அக்கட்சியில் பயணித்தவர் கமீலா நாசர். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில் தற்போது கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் சந்தோஷ் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “நமது கட்சியின் மாநில செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  20-04-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தான் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து கமீலா நாசர் இன்னும் வாய் திறக்கவில்லை.
  Published by:Sheik Hanifah
  First published: